search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு பாலியல் தொல்லை"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 வயது குடும்பப் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததால் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட 27 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #privateparts #partschopped #stalkingwoman
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், கிழக்கு டோம்பிவில்லி அருகேயுள்ள யஷ்வந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் துஷார் புஜாரே(27). வீட்டுக் கடன் வாங்கித்தரும் ஆலோசகராக பணியாற்றிவந்த துஷாருக்கு அப்பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    திருமணமாகி 21 வயது மகள் மற்றும் 15 வயதில் ஒரு மகன் என இரு பிள்ளைகளுக்கு தாயான அந்தப் பெண்ணின் மீது மோகம் கொண்ட துஷார், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை தொல்லைப்படுத்த ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் கணவரிடமே தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    இதனால் துஷாருக்கும் தனது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்க ஆரம்பித்தார். இதைதொடர்ந்து, அவர்களின் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது.

    தனது நிம்மதியை கெடுத்த துஷாருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணிய அந்தப் பெண், இரு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். வீட்டுக்கடன் தொடர்பாக பேச வேண்டும் எனகூறி நன்டவலி ஹில் பகுதிக்கு துஷாரை வரவழைத்தார்.

    கடந்த 25-ம் தேதி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள நன்டவலி ஹில் பகுதியில் தனது நண்பர்கள் பிரதிகா கெனியா மற்றும் தேஜாஸ் மாட்ரே ஆகியோருடன் அந்தப் பெண்ணும் காத்திருந்தார். இரவு 9 மணியளவில் துஷார் அங்கு வந்து சேர்ந்தார்.

    அப்போது பிரதிகா கெனியா, தேஜாஸ் மாட்ரே ஆகியோர் சேர்ந்துகொண்டு அவரை பலமாக தாக்கினர். சற்றும் எதிர்பாராத நிலையில் கத்தியை எடுத்த அந்தப் பெண் துஷாரின் பிறப்புறுப்பை வெட்டி துண்டித்தார்.

    வேதனையால் துடித்து அலறிய துஷாரை கிழக்கு டோம்விலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மூன்று பேரும் அழைத்துவந்து சேர்த்தனர். பின்னர், அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்துவந்த போலீசார், துஷார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையில், மேல்சிகிச்சைக்காக ஜே ஜே  மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட துஷார் புஜாரே சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார். #privateparts #partschopped #stalkingwoman 
    கும்மிடிப்பூண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள அரும்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர். அதே பகுதியில் சுடுகாடு அருகே தைலமரத்தோப்பில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தோக்கமூர் காலனியைச் சேர்ந்த கலைமன்னன் (22) என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    மேலும் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண் அவரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கலைமன்னன் சரமாரியாக பெண்ணை தாக்கி தப்பி ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து கலைமன்னனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கைதான 3வது பாதிரியாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை அடுத்த மல்லப்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பே பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    திருமணத்திற்கு பிறகு இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க அந்த பெண் ஆலயத்திற்கு சென்றார். அங்கு பாவ மன்னிப்பு அறிக்கையிட்டார். பாவமன்னிப்பு கேட்ட பாதிரியார் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.

    மேலும் 3 பாதிரியார்களும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி. மேத்யூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    பாதிரியார்கள் 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ 2 நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பாதிரியார்களும் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதில், பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ என்பவர் கோழஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்றனர்.

    அங்கு மறைந்திருந்த பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கோழஞ்சேரி தாலுகா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவல்லா முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் இன்னும் 2 பாதிரியார்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



    ஆண்டிப்பட்டி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் தேனி அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்த அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர பணியாளர்களைத் தவிர ஒப்பந்த அடிப்படையில் காவலர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கருப்பையா மனைவி செண்பக வள்ளி (வயது 31). துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியைச் சேரந்த ராமன் (45) என்பவரும் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தொடர்ந்து செண்பக வள்ளிக்கு பாலியல் தொல்லை கொடத்து வந்துள்ளார்.

    நேற்று க.விலக்கு பஸ் ஸ்டாப்பில் நின்ற போது இரட்டை அர்த்தத்தில் அவரிடம் தகராறு செய்து ராமன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து க.விலக்கு போலீசில் செண்பகவள்ளி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.

    ×